என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காய்கறி வாங்கும் பெண்கள்
  X
  காய்கறி வாங்கும் பெண்கள்

  மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
  மதுரை

  ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்க ப்படும் தக்காளி பயன்படுத்த ப்படாத உணவு பதார்த்த ங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு உணவிலும் தக்காளியின் பங்களிப்பு முக்கிய தேவை யாக இருந்து வருகிறது.

  இதனால் மார்க்கெட்டு களில் தக்காளிகளை அனைவரும் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்த தக்காளி சில நேரங்களில் விலை வீழ்ச்சி அடைந்து சாலைகளில் கொட்டப்படும். ஆனால் பல நேரங்களில் பாக்கெட்டை பதம் பார்க்கும் அளவிற்கு வரலாறு காணாத விலை உயர்ந்து இல்லத்தரசிகளை கலங்கடிக்கவும் செய்யும்.சில நாட்களாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை மீண்டும் ஏறியுள்ளது. கிலோவுக்கு 85 ரூபாய் வரை விற்கப்படுவதாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக தக்காளி உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் விளைச்சல் அதிகமாக இருக்கும். சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக பயிரி டப்பட்ட தக்காளி செடிகள் பல இடங்களில் சேத மடைந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மற்றும் மதுரை மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்ட தக்காளி சில வாரங்களாக விலை குறைந்து கிலோ 15 ரூபாய்க்கு விற்க கப்பட்டது. இந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் தக்காளி கிராக்கி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தினமும் கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை அதிகரித்து வருகிறது இன்று மொத்த மார்க்கெட்டில் 65 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டது சில்லறை மார்க்கெட்டுகளில் 75 முதல் 85 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டு வருகிறது. 

  இதனால் பொதுமக்கள் மார்க்கெட்டுகளில் விலையை விசாரித்த பிறகே தக்காளியை வாங்கு கிறார்கள். மேலும் மற்ற காய்கறிகளான பல்லாரி, சின்ன வெங்காயம், பீன்ஸ், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், புடலை, பாகற்காய், மிளகாய், இஞ்சி, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் விலை வழக்கம் போல செய்யப்பட்டு வருகிறது. 
  ஆனால் தக்காளியின் விலை மட்டும் அதிகரித்து ள்ளது பெண்களிடம் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து இருந்தும் விலை குறையாததால் சில பகுதிகளில் தக்காளியை வியாபாரிகள் பதுக்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

  எனவே தக்காளி குடோ ன்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய சோதனை நடத்தி அனைத்து மக்களுக்கும் சரியான விலையில் தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது‌ இதனிடையே தக்காளியின் வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாளில் தக்காளி விலை 100ரூபாயை தாண்டும் என்றும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.எனவே தினமும் ஏறிவரும் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கி றார்கள்.
  Next Story
  ×