search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்..
    X
    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்..

    தருமபுரியில் வாடகை வீடு எடுத்து செல்போன்களை குறி வைத்து திருடிய கும்பல்- போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்

    தருமபுரி மாவட்டத்தில் செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி வந்த கும்பலை நேற்று இரவு பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விலையுயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது சம்பந்தமாக செல்போனை பறிகொடுத்த நபர்கள் தருமபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து வந்துள்ளனர்.

    அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் திருடுபோன செல்போன்களை பறிமுதல் செய்து உரிய நபர்களுக்கு வழங்கி வந்தனர். செல்போன்களை கொள்ளையடிக்கும் கும்பல் திருடும் செல்போனில் உள்ள ஐ.எம்ஐ நம்பர்களை மாற்றி போலீசாருக்கு தண்ணி காட்டி வந்துள்ளனர்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மேக்னாம்பட்டி கிராமத்தில்  வெளியூரை சேர்ந்த 15 இளைஞர்களும், உள்ளூரை சேர்ந்த 8 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கி செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி வந்துள்ளது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று இரவு சுமார் 10 மணிக்கு புலிக்கரை அடுத்த வரகூர் கிராமத்தில் சுற்றி திறந்தனா. 4 இளைஞர்களை ஊர் மக்கள் சுற்றி வளைத்த போது இருவர் தப்பி ஓடிவிட்டனர்.  அதில் 2 பேர் மட்டும் சிக்கியுள்ளனர். இது குறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு இளைஞர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். 
    அப்போது அவர்கள் இரவு நேரங்களில் கோடை வெயிலின் புழுக்கத்தால் வெளியில் பொதுமக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் புகுந்து  செல்போன்களை மட்டும் திருடும் கும்பல் என தெரியவந்தது. அந்த செல்போன்களில் உள்ள ஐ எம் ஐ நம்பரை மாற்றி வாட்ஸ்அப் குரூப் அமைத்து அந்த குரூப்பில் ஐடிஐ காலேஜ் உள்ளிட்ட மாணவர்களுக்கு செல்போன்களின் விலைப்பட்டியலை தெரிவித்து வந்துள்ளனர். செல்போன் தேவைப்படும் மாணவர்கள் செல்போன்களை வாங்கி பயன்படுத்தி வருவது  தெரியவந்துள்ளது.

    மேலும் 2 நபர்கள் வைத்திருந்த 8 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×