என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாயக்கனேரி மலை கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிய பூச்செடிகள்.
  X
  நாயக்கனேரி மலை கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிய பூச்செடிகள்.

  ஆம்பூரில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூரில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்தது.
  ஆம்பூர்:

  ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி மலை கிராமங்களில் கனமழை காரணமாக கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  ஆம்பூர் கம்பி கொல்லை பகுதியில் உள்ள ஆணை மடுகு தடுப்பணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு தடுப்பணை நிரம்பியது. உபரி நீர் வெளியேறி வருகிறது.

  நாயக்கனேரி மலை கிராமத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் கேழ்வரகு காய்கறிகள் நெற்பயிர்கள் கத்திரிக்காய் வெண்டைக்காய் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

  விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது பயிர்கள் அழுகி சேதமடையும் சூழ்நிலை நிலவுகிறது. அப்பகுதி பொதுமக்கள் வருவாய் துறை வேளாண்மைத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×