என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- கூலி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியானார்.
  சாத்தான்குளம்:

  சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 26). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கபாண்டி (வயது 40). மேட்டுவிளையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). 

  கூலித்தொழிலாளர்களான  இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் வேலைக்கு செல்ல பூச்சிக்காட்டிலிருந்து திசையன்விளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

   எதிரே திசையன்விளையில் இருந்து ஜெயகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர்  சாமான்கள் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பூச்சிகாடு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

  இடைச்சிவிளை செக்போஸ்ட் அருகே வரும் போது இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். 

  இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

  இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×