என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆவுடையப்பன்
  X
  ஆவுடையப்பன்

  நெல்லை கல்குவாரி விபத்து: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் கூறினார்.
  நெல்லை:

  நெல்லை அடை மிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை   நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

  இதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம், தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. குவாரியில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.

  இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×