search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணுக்கு வெள்ளாடுகள் வழங்கிய காட்சி.
    X
    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணுக்கு வெள்ளாடுகள் வழங்கிய காட்சி.

    திருச்செந்தூர் பகுதியில் 25 ஏழை பெண் பயனாளிகளுக்கு 125 வெள்ளாடுகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    திருச்செந்தூர் பகுதியில் 25 ஏழை பெண் பயனாளிகளுக்கு 125 வெள்ளாடுகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
    திருச்செந்தூர்:

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 யூனியன்களில் தலா 100 பெண் பயனாளிகள் வீதம் 1200 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒருவருக்கு 5 விலையில்லா வெள்ளாடுகள் வீதம் 6000 ஆடுகள் வழங்கப்பட உள்ளது.  

    தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று திருச்செந்தூர் கால்நடை ஆஸ்பத்திரியில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது.

     இதில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட 25 பெண் பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் மொத்தம் 125 வெள்ளாடுகள் வழங்கினார். 

    விழாவில், கால்நடை பராமரிப்பு துறை தூத்துக்குடி மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராஜன், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆண்டனி இக்னேசியஸ் சுரேஷ், 

    எட்வின், சந்தோச முத்துக்குமார், பூதலிங்கம், கால்நடை உதவி டாக்டர்கள் பொன்ராஜ், ராகவி, சரண்யா, காயத்ரி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,  மணல்மேடு சுரேஷ், நகர் மன்ற உறுப்பினர் ரேவதி கோமதிநாயகம்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×