என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காடையாம்பட்டி பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி நடந்த போது எடுத்தபடம்
  X
  காடையாம்பட்டி பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி நடந்த போது எடுத்தபடம்

  காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம் நடைபெற்றது.
  காடையாம்பட்டி:

  சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ் ராம்  உத்தரவுபடி துப்புரவு முகாம் நடைபெற்றது. 

  இந்த முகாமிற்கு செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். இதையொட்டி  காடையாம்பட்டி பேரூராட்சி பகுதி சில இடங்களில் செடி, கொடிகள் அகற்றப்பட்டன. 

  இதேபோல் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்களை அகற்றி துணியால் நெய்யப்பட்ட கவர்களை பயன்படுத்த பேரூராட்சி உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

  இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் குமார், பேரூராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு, அலுவலர்கள் முரளி ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×