என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
  X
  முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

  கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் தனியார்  குவாரியில் கடந்த 14ம் தேதி இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர்.

  இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பாக ரூ.10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் சார்பாக ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

   விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  Next Story
  ×