என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடம் கரைப்புதூர் ஊராட்சியில் ரூ.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊராட்சி செயலாளர் காந்திராஜ் வரவேற்றார். பூமி பூஜையில் கலந்துகொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.எஸ் எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில் ரூ.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

  இதன்படி கரைப்புதூர் ஊராட்சி சுகுணா நகர் வீதியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் 2 அடுக்கு கப்பி அமைத்து தார் சாலை அமைக்கும் பணி, ஊராட்சி பொது நிதியிலிருந்து சரவணபவ நகர் வீதியில் ரூ. 7.55 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், மற்றும் அய்யம்பாளையம் சிவசக்தி நகர் ரோடு, ஜோதி கார்டன் முதல் வீதி கான்கிரீட் ரோடு, அல்லாளபுரம் கே.கே. கார்டன் இப்பகுதியில் தார் சாலை அமைத்தல், உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. 

  இந்த நிகழ்ச்சிக்கு கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கார்த்திகா மகேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி கந்தசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

  ஊராட்சி செயலாளர் காந்திராஜ் வரவேற்றார். பூமி பூஜையில் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.எஸ் எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவர்த்தினி லோகநாதன், திவ்யா செந்தில்குமார், மல்லிகா மகாலிங்கம், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×