என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ்டோங்கரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்
  X
  சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ்டோங்கரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்

  கூடலூர் அருகே மனநலம் பாதித்த பெண் கற்பழித்து கொலை?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தமபாளையம் ஏ.எஸ்.பி ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  கூடலூர்:

  தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி சாலையில் ரேசன் கடை உள்ளது. இந்த கடை அருகே பெண் ஒருவர் நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் இறந்துகிடப்பதாக கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்த பெண்ணின் பெயர் மயில்(50) என தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்ற நிலையில் தெருவில் சுற்றி வந்துள்ளார். உடலில் ஆடைகள் இல்லாமல் முகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

  உத்தமபாளையம் ஏ.எஸ்.பி ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேனியில் இருந்து மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

  மேலும் மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

  பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் அவர் எப்படி இறந்தார் என தெரியவரும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×