என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு- கண்காணிப்பு காமிரா பொருத்த உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடக்கிறது. இதில் 9 தேர்வு மையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
  சேலம்:

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5 ஆயிரத்து 529 பணியிடங்களை நிரப்ப  கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி  அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  
   
  குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,  ஈரோடு, கரூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளநிலை, முது நிலை பட்டதாரிகள் ஏராளமானோர்  விண்ணப்பித்தனர். 

  இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி.  வெளியிட்டு இருக்கிறது.  சேலம் மாவட்டத்தில் 63,437 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

   
  இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்குட்பட்ட 161 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 218 தேர்வு கூடங்களில் வருகின்ற 21-ந்தேதி  (சனிக்கிழமை)  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறவுள்ளது.

  தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

   சேலம் போக்குவரத்து கழக கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உள்ளூர், வெளியூருக்கு செல்லும் பஸ்களும் தேர்வு மையங்கள் முன்பு நின்று செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.   மேலும் தேர்வு குறித்த அறிவிப்பு நோட்டீசை வழக்கம்போல் 21-ந்தேதி அன்று பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டவும் அறிவுறுத்தி உள்ளனர். 

  அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.    9 தேர்வு கூடங்கள் கூர்நோக்கு தேர்வு கூடங்களாக தேர்வு செய்யப்பட்டு அவற்றில் கண்காணிப்பு காமிரா பொருத்த கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 

  அதன்படி அங்கு கண்காணிப்பு காமிரா  பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
  Next Story
  ×