search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தாரமங்கலத்தில் பழுதான கழிவுநீர் தொட்டியை அகற்ற கோரி போராட்டம்

    தாரமங்கலத்தில் பழுதான கழிவுநீர் தொட்டியை அகற்ற கோரி போராட்டம் நடத்தினர்கள்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. 12-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருந்த ஒரு தென்னை மரம் முறிந்து அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது விழுந்தது.   அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    மேலும் மழைநீர் மற்றும் கழிவுநீர்  ஊருக்குள் புகுந்ததால் இன்று காலை வார்டு கவுன்சிலர் சின்னுசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நகராட்சி மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுபற்றி கவுன்சிலர் சின்னுசாமி கூறுகையில், 22-வது வார்டு பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம் .பொதுமக்கள் பயன்படுத்திவரும் பொதுக்கழிப்பிட கழிவு நீர் தொட்டி சாதாரண தகரம் கொண்டு மூடப்பட்டு உள்ளதால் துர்நாற்றமும் வீசுகிறது.

    அதேபோல இந்த பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வயதான தென்னை மரங்கள் ஏராளமாக உள்ளது. மரங்கள் தாமாக முறிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்தும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.

    அதனைத்தொடர்ந்து மின்சாரவாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி மின்கம்பத்தை சரி செய்தனர்.
    Next Story
    ×