என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  வீடு புகுந்து 57 பவுன் நகைகளை சுருட்டிய பெண் கைது- கூட்டாளியான ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அருகே வீடு வீடாக சென்று துணி வாங்குவது நடித்து நகைகளை கொள்ளையடித்த பெண்ணை கைது செய்த போலீசார், கூட்டாளியான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
  சென்னை:

  வில்லிவாக்கம் வடக்கு திருமலை முதல் தெருவை சேர்ந்தவர் பிரியா. இவர் கடந்த மாதம் அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்ற போது வீட்டை பூட்டாமல் தாழ்பாள் மட்டும் போட்டு விட்டு சென்றார்.

  திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பிரோவில் இருந்த 57 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா இதுபற்றி ஐ.சி.எப். போலீசில் புகார் அளித்தார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

  அப்போது பிரியாவின் வீடு புகுந்து பெண் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் பொறுத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போட்டு ப்பார்த்து போலீசார் இதனை உறுதி செய்தனர்.

  நகைபணத்தை கொள்ளையடித்து சென்ற பெண் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. செங்குன்றம் முண்டியம்மன் நகர் அண்ணா தெருவில் வசித்து வரும் கோகிலா என்ற 31 வயது இளம்பெண் பிரியாவின் வீடு புகுந்து நகைபணத்தை கொள்ளையடுத்து சென்றது தெரியவந்தது.

  இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கோகிலா தன்னார்வலர் போல வீடு வீடாக சென்று துணிகளை வாங்குவது போல நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

  கோகிலாவிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதி உள்ள நகைகளில் சிலவற்றை தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக கோகிலா தெரிவித்தார். இதையடுத்து சரவணனை போலீசார் தேடினர். அவர் தப்பி ஓடி தலைமறை வாகிவிட்டார்.

  அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

  கைதான கோகிலா தன்னார்வலர் போல நடித்து வீடுவீடாக சென்று துணிகளை வாங்குவது போல நோட்டமிட்டு பிரியாவின் வீட்டில் கைவரிசை காட்டி இருக்கிறார். அவர் இதுபோன்று மேலும் பல வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நகையுடன் தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவர் சரவணனிடம் கோகிலா கடன் வாங்கி இருந்ததும், அந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  பகல் நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு பின்னர் ஆள் இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டும் கோகிலாவை போன்று மேலும் பல பெண்கள் சுற்றி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்ற நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
  Next Story
  ×