search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் தாளாளர் தாவூத் பாட்சா தலைமையில் நடை
    X
    பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் தாளாளர் தாவூத் பாட்சா தலைமையில் நடை

    கல்லூரியில் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள்

    பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.
    பாபநாசம்:

    பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிரிதொழில்நுட்பவியல் துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா தலைமை வகித்தார். 

    துறைத் தலைவர் பிரீத்தி வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பேராசிரியர் ரவியா பேகம், கல்லூரி இயக்குனர் காரல்மார்க்ஸ், கல்லூரியின் முதல்வர் சசிகுமார், கல்லூரியின் துணை முதல்வர் தங்கமலர், கல்வியியல் கல்லூரி முதல்வர் விமலா, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் லதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். 

    தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதியை சார்ந்த 10 கல்லூரிக ளுக்குமேல் போட்டிகளில்கலந்து கொண்டனர். திருச்சி அகில இந்திய வானொலி மையத்தின் வர்ணனையாளர் நக்கீரன் கலந்துகொண்டு கல்வி பற்றிய முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். 

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து போட்டிகளிலும் முதன்மை யாக வெற்றி பெற்று ஒட்டு மொத்த கோப்பையை கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் வென்றனர். துறை பேராசிரியர் தமிழ்வா ணன் நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் பேராசிரியர் தேவிஅன்பரசி நன்றி கூறினார்.

    Next Story
    ×