என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கூட்டத்தில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசிய காட்சி.
  X
  கூட்டத்தில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசிய காட்சி.

  வருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற பாடுபட வேண்டும் - பா.ஜ. மாவட்ட தலைவர் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என பா.ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பேசினார்.
  உடன்குடி:

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்ட சித்ராங்கதன் உடன்குடி ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் உடன்குடி ஒன்றிய பா.ஜனதா அலுவலகத்தில் நடைபெற்றது.

  ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலர் சங்கரகுமார் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர்கள் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், ஒன்றிய பொதுச்செயலர் அழகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட சித்ராங்கதன் பேசியதாவது:-

   2024-ம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியை பா.ஜ.க. நிச்சயம் கைப்பற்றும்.நிர்வாகிகள் தினமும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், நிர்வாகிகள் எந்தவித கருத்துவேறுபாடுமின்றி நாட்டு நலன் ஒன்றே நமது லட்சியம் என ஒரே அணியில் நின்று எதிரியை வீழ்த்த வேண்டும். 

  இத்தொகுதியின் வெற்றிக்கனியை பாரதப் பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்க வேண்டும், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போதே தொடங்கி வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று பேசினார்.

  ஒன்றிய மகளிரணி பொதுச்செயலர் வசந்தி நன்றி கூறினார். ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×