search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.
    X
    உடன்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    தமிழகத்தில் சாதி, மத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    தமிழகத்தில் சாதி, மத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் உடன்குடி மெயின்பஜார் அண்ணா திடலில் நேற்றுமாலை நடந்தது.

    உடன்குடி ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார்,  உடன்குடி பேரூராட்சி மன்றத் தலைவி ஹீமைராரமீ ஷ்பாத்திமா அஸ்ஸாப் அலி, யூனியன்துணை தலைவர் மீரா சிராசூதீன், பேரூராட்சிமன்ற நியமன குமு உறுப்பினர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    உடன்குடி பேருராட்சி மன்ற துணைத் தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ் அனைவரையும் வரவேற்றுப்பேசி பொன்னாடைகளை அணிவித்தார். தெற்கு மாவட்ட தி.மு.க. கழக செயலாளரும், தமிழக மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

     தமிழகத்தில் தி.மு.க. அரசு ஒராண்டில் பல்வேறு சாதனைகளை  செய்து முதல்-அமைச்சர் ஸ்டாலின்சாதனை படைத்துள்ளார்.  தமிழ்நாட்டில் சாதி, மத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின். 

    வீடு தேடி மருத்துவம்,  இல்லம் தேடி கல்வித்திட்டம், மக்கள் குறைதீர்க்கஅரசு அதிகாரிகள் மக்களைத் தேடிவருவது என பல திட்டங்களை அறிவித்து மக்கள் பணியில் மகத்தான சாதனை படைக்கும் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின், திருச்செந்தூர் கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக மாற்றுவேன் என்று சொல்லி அதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

    இதற்காக பல்வேறு திட்டங்களைஅறிவித்து செயல்படுத்தி வருகிறார்.இப்படிப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்களாகிய நாம் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×