என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பொங்கலூரில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகளிர் சுய உதவிக்களை சேர்ந்த பெண்கள் சுய தொழில் செய்திட அரசு மானியத்துடன் வங்கி கடனுதவி உள்ளிட்ட உதவிகளை செய்திட முடிவு செய்யப்பட்டது.
  பல்லடம்:

  பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் மாவட்ட தொழில் மையம், வேளாண்மை துறை, தாட்கோ ஆகியவை சார்பில் இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்ட ஆலோசனைக் கூட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது.
   
  இந்த கூட்டத்திற்கு பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் தலைமை வகித்தார். இதில் வேலைவாய்ப்பு துறை இணை இயக்குநர் சந்திரசேகர், மாவட்ட தொழில் மைய அதிகாரி கண்ணன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் தனவேந்தன், கனரா வங்கி அதிகாரி ஜோதி சுப்பிரமணியம், ஒன்றிய ஆணையாளர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், மகளிர் சுய உதவி குழுவினர், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் பொங்கலூர் ஒன்றிய பகுதியில் தொழில் தொடங்க விரும்பும் தகுதியுடையவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தொழில் துறை வளர்ச்சி பெறவும், மகளிர் சுய உதவிக்களை சேர்ந்த பெண்கள் சுய தொழில் செய்திட அரசு மானியத்துடன் வங்கி கடனுதவி உள்ளிட்ட உதவிகளை செய்திட முடிவு செய்யப்பட்டது.
  Next Story
  ×