search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை
    X
    பள்ளி பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை

    திண்டிவனத்தில் அவலம்- பள்ளி பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை

    பள்ளி பகுதியில் கள்ளத்தனமாக புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்டு வரும் உயிரை பறிக்கும் போலி மதுபானங்கள் அதிக விலைக்கு குடிபிரியர்களுக்கு விற்கப்படுகின்றது.
    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான நேரு வீதி, செஞ்சி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிகளவில் கிராமப்புறங்களில் இருந்து வந்து கல்வி பயின்று செல்கின்றனர்.

    இந்த பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது பள்ளியில் இருந்து 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பலன் இல்லை.

    தற்போது அரசு மதுபான கடையின் அருகில் அனுமதி பெறாத பார்களாக பல்வேறு பெட்டிக்கடைகள் முளைத்துள்ளது

    இந்தக்கடைகளில் தினமும் அதிகாலை 6 மணி முதல் தொடர்ந்து கள்ளத்தனமாக புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்டு வரும் உயிரை பறிக்கும் போலி மதுபானங்கள் அதிக விலைக்கு குடிபிரியர்களுக்கு விற்கப்படுகின்றது.

    அவ்வாறு விற்கப்படும் போலி மதுபானங்களை குடிமகன்கள் அருகே உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இடையூறாக உள்ளனர். மேலும் பெட்டிக் கடைகளின் அருகில் அமர்ந்துகொண்டு சாலையில் குடிமகன்கள் மது அருந்தி வருகின்றனர்.

    அதோடு சாலையில் செல்லும் மாணவமாணவிகள் மீதும் பாட்டில்களை வீசி வருகின்றனர்.

    இதனால் அங்கு அமைந்துள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகி அவ்வழியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்

    இது குறித்து இன்று வரை பல்வேறு புகார்கள் சென்றிருந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அதே போல திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ தபால் நிலையம் அருகே மதுபானங்கள் காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை போலீசார் துணையுடன் விற்கப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    Next Story
    ×