search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்கப்பட்ட செல்போனை போலீஸ் சூப்பிரண்டு உரியவரிடம் வழங்கினார்.
    X
    மீட்கப்பட்ட செல்போனை போலீஸ் சூப்பிரண்டு உரியவரிடம் வழங்கினார்.

    ஆன்லைன் மோசடி குறித்து புகார் ெதரிவிக்கலாம்

    ஆன்லைன் மோசடி குறித்து புகார் ெதரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ெதரிவித்தார்.
    மதுரை


    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 40 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், “வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவர்களிடம் ரகசிய எண், வங்கி கணக்கு எண், சி.வி.வி. மற்றும் ஓ.டி.பி. விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.

    பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் இன்வெஸ்ட்மெண்ட் செயலிகளை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைன் செயலி மூலம் பணம் பெற்று ஏமாற வேண்டாம். 

    தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ காலை எடுத்து பேச வேண்டாம். டீம் வியூவர் போன்ற  செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்றார்.
    Next Story
    ×