search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம், நாமக்கல்லில் 21-ந்தேதி குரூப்-2 தேர்வு:

    குரூப்-2 தேர்வில் வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக எழுதாவிட்டால் 5 மதிப்பெண் கழிக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
    சேலம்:
     
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5 ஆயிரத்து 529 பணியிடங்களை நிரப்ப  கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி  அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  

    சேலம், நாமக்கல் குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,  ஈரோடு, கரூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர்   விண்ணப்பித்தனர். 

    அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.  இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி.  வெளியிட்டு இருக்கிறது. 

    மைனஸ் மதிப்பெண் மேலும் விண்ணப்ப தாரர்களுக்கு பல அறிவு ரைகளையும் வழங்கி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய, பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, விடைத்தாள் பெற்றதும், அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால், பயன்படுத்தும் முன்பே மாற்றி கொள்ள வேண்டும்.

    தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக, வேறு விடைத்தாள் பெற்று, அதில், தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால், தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

    மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை ஷேடிங் செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும்.

    5 மதிப்பெண் கழிக்கப்படும் வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால் 5 மதிப்பெண் கழிக்கப்படும்.

    ரேகை வைக்க முடியாத மாற்று திறனாளிகள் தவிர, மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில், விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால்  2 மதிப்பெண் கழிக்கப்படும். எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும். எனவே தேர்வர்கள் மிகவும் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்.
    Next Story
    ×