search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.
    X
    மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

    ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு 4 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது

    ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு 4 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது போக்குவரத்துக்கு அனுமதி கலெக்டர் கார்மேகம் தகவல்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர்  கார்மேகம், ஆய்வு மேற்கொண்டார்.

    மண்சரிவு  பின்னர் இது குறித்து அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    ஏற்காடு மலைப்பாதையில் 40அடி பாலம் அருகில் நேற்று இரவு பெய்த மழையினால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நேற்று இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
     
    இரவோடு இரவாக நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து மிக வேகமாக செயல்பட்டு 4 மணி நேரத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடம் முழுமையாக சரி செய்யப்பட்டது.

    போக்குவரத்து  மண்சரிவுகள் சரி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து இயல்பாக ஏற்காட்டிற்கு தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் இன்று ஆய்வு  செய்யப்பட்டது. 

    அந்த வகையில் படகு இல்லம், அண்ணா பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய அளவில் குடிநீர் வசதிகள், குப்பை தொட்டிகள், கழிப்பிட வசதிகள் முறையாக அமைக்கபட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
     
    சுற்றுலாப்பயணிகளிடம் மேலும் என்ன என்ன வசதிகள் ேதவை என கேட்டறிந்தேன். ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்கும்  வகையில் உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    காகித பைகள் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகில் தன்னார்வலர்களைக் கொண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களில் பிளாஸ்டிக் பைகள் எடுத்துச்சென்றால் அதற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் காகிதப் பைகள் வழங்கப்படுகின்றன. 
     
    அதே போன்று வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு கோடையிலும் ஏற்காட்டில் தற்பொழுது நல்ல மழைப்பொழிவும், மிகுந்த பசுமையும் நல்ல நீர்வளத்தோடு இயற்கை அழகோடும் காட்சி அளிக்கிறது. 

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஏற்காடு கோடை விழா 26.05.2022 முதல் 01.06.2022 வரை நடைபெறவுள்ளது. ஏற்காடு கோடை விழாவினை சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×