search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வார சந்தை புதுபிக்கும் பணிகளை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி நேரில் ஆய்வு செய்த காட்சி.
    X
    வார சந்தை புதுபிக்கும் பணிகளை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி நேரில் ஆய்வு செய்த காட்சி.

    செங்கோட்டை வார சந்தை புதுப்பிக்கும் பணிகள் -நகராட்சி தலைவர் ஆய்வு

    செங்கோட்டை வார சந்தை புதுப்பிக்கும் பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
    செங்கோட்டை:

    செங்கோட்டையில் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் வாரசந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி புளியரை, தெற்மேடு, கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, தவணை வல்லம் பிரானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்க  வந்து செல்வது வழக்கம். 

    மேலும் மிகுந்த பாரம்பரியமிக்க வார சந்தைக்கு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல அதிகளவில் வந்து செல்வர். அன்றைய நாளில் செங்கோட்டை வார சந்தை காலை முதலே களைகட்டும். 

    ஏற்கனவே தற்போது வாரசந்தை செயல்பட்டு வரும் இடத்தில் பழங்கால கட்டிடங்கள் மிகவும் பழமை வாய்ந்த நிலையில் காணப்படுவதால் இதனை சீரமைக்க வேண்டும் என மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த நிலையில் தற்போது புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     முதல்கட்டமாக மிகவும் பழுதடைந்த கட்டிடங்கள் முழுமையாக இடிக்கபட்டு வருகிறது. இதனை நகர்மன்ற சேர்மன் ராமலெட்சுமி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    Next Story
    ×