என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  துப்புரவு பணியை பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தொடங்கி வைத்தார்.
  X
  துப்புரவு பணியை பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தொடங்கி வைத்தார்.

  சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி நடைபெற்றது.
  சாயர்புரம்:

  சாயர்புரம் பேரூராட்சி பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தலைமை தாங்கி துப்புரவு பணிகளை தொடங்கி வைத்தார்.

  பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் குப்பைகளை அள்ளியும், சாலையோரத்தில் உள்ள புற்கள், செடிகளை வெட்டி, அகற்றியும் பொதுமக்களிடம் துப்புரவு பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  இந்நிகழ்ச்சியில் சாயர்புரம் தி.மு.க. நகர செயலாளர் அறவாழி, பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மற்றும்  பேரூராட்சி மேற்பார்வையாளர் கல்யாண் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×