search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் செல்போன், லேப்டாப் திருடிய வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் செல்போன், லேப்டாப் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஜோலார்பேட்டை, 

    தெலுங்கானா மாநிலம் கே.வி.ரெங்காரெட்டி சரூம் நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார் (வயது53) இவர் நேற்று ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். 

    அப்போது ரெயில் ஜோலார்பேட்டை அருகே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இதில் அரவிந்த் குமார் தூங்கிக் கொண்டிருந்தர். இவர் வைத்திருந்த பேக்கை  யாரோ திருடி சென்று உள்ளனர்.

    அந்த பேக்கில் செல்போன் மற்றும் லேப்டாப் இருந்தது,
    இது சம்பந்தமாக அரவிந்த் குமார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வந்தனர். 

    இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1 வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார் இதனால் சந்தேகம் அடைந்த  ரெயில்வே போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த இக்பால் மகன் சபீர் (வயது 35) என்பதும் இவர் ஓடும் ரெயிலில் செல்போன் மற்றும் லேப்டாப் திருடியது ஒப்புக்கொண்டார். 

    இதனையடுத்து போலீசார் சபீரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இவரிடமிருந்து செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×