search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை

    அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: 

    சாதாரணக் கற்கள், மண், கிராவல், களி மண், சரளை மண், மணல், கிரானைட், சுண்ணாம்புக்கல், குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற கனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுத்தல்,

    அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது, ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்துவது, குத்தகை உரிமம் முடிவுற்ற பின்னரும் தொடர்ந்து குவாரியை இயக்குவது குற்றமாகும். 

    எனவே, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய்  இழப்பை தடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். 

    அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கன ரக இயந்திரம், 

    வாகனங்கள், கருவிகள் ஆகியவை குறித்தும், இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள், உடந்தையாக உள்ளவர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×