search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம்

    பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் சையதுரா பீயம்மாள்,தலைமையிலான அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் சையதுராபீயம்மாள், தலைமையிலான அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

    இதில் பொதுமக்களின் ரேசன் கார்டுகளில், பெயர் திருத்தம் பெயர் மாற்றம் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செம்மிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஷீலாபுண்ணியமூர்த்தி, துணை தலைவர் வரதராஜ், வருவாய் ஆய்வாளர் தீபன்சக்கரவர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் புண்ணியமூர்த்தி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×