என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளி மாணவிகள்
  X
  பள்ளி மாணவிகள்

  இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக் கல்வித்துறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் எழுதுகின்றனர்.
  சென்னை:

  தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 8.37 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள்.

  11-ம் வகுபபு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். இதேபோல், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். மொத்தம் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. 

  ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.

  இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை நடந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மொத்தமாக 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×