என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு காட்சி
  X
  கோப்பு காட்சி

  முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு
  கன்னியாகுமரி, மே. 14-

  தக்கலை அருகே உள்ள  செம்மண்விளை அப்பட்டு விளை பகுதியை சேர்ந்தவர் வறுவேல்.  இவரது மனைவி மேரி ரெத்தினம்(வயது69).

  இவர் இன்று காலை 6 மணியளவில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை பெற வீட்டில் இருந்து புறப்பட்டார். பஸ் நிலையம் வந்த   மேரி ரெத்தினம் பஸ்சுக்காக காத்திருந்தார். 

  அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கையில் ஒரு காகிதத்தை வைத்திருந்தனர்.  அதனை காட்டி முகவரி கேட்பது போல நைசாக  பேச்சுக் கொடுத்தனர்.

  அந்த காகிதத்தை வாங்கி மேரி ரெத்தினம் பார்த்த போது, வாலிபர்கள் இரு வரும் அவரது கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் நகையை பறித்தனர். இந்த சம்பவத்தால் மேரி ரெத்தினம் அதிர்ச்சி அடைந்தார்.

  அவர் சுதாரிப்பதற்குள் 2 வாலிபர்களும்   மோட்டார் சைக்கிளில்  மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக  தக்கலை போலீஸ் நிலை யத்தில் மேரி ரெத்தினம் புகார் செய்தார். 

  போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தக்கலை பஸ் நிலையம் அருகே ஒரு பெண்ணின் நகையும் இதேபோல் பறிக்கப்பட்டது. 

  தக்கலை பகுதியில் கடந்த சில நாள்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று  வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×