search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றும் பணி நடந்த காட்சி.
    X
    பாளையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றும் பணி நடந்த காட்சி.

    நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு-பேனர்கள் அகற்றம்

    நெல்லையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு மற்றும் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
    நெல்லை:

     தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. எனிதும் விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் விளம்பர பலகைகள், பெரிய அளவிலான பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்படுகிறது. 
     
    நெல்லை மாநகரிலும் சில இடங்ளில் பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைத்துள்ளனர்.  இது தொடர்பாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. 
     
    பாளை மண்டல பகுதியில் உதவி கமிஷனர் ஜகாங்கீர்பாஷா மேற்பார்வையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

    முதற்கட்டமாக குலவணிகர்புரம் ரெயில்வே கேட் முதல் பாளை சித்தா கல்லூரி வரையிலான பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கபட்ட இடத்தை தாண்டி வைக்கப்பட்ட கடையின் பெயர் பலகைகள் ஆகியவை அகற்றப்பட்டது.

     அப்போது சில வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.  

    செயற்பொறியாளர் நாராயணன், துணை பொறியாளர் அருள், இளநிலை பொறியாளர் தன்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், சங்கரநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். 

    தொடர்ந்து நெல்லை மாநகராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள சாலைகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சில நாட்களில் தொடங்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
    Next Story
    ×