என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மும்முரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்னிலம் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
  நன்னிலம்:

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்ட பொதுப்பணித்துறை எல்லைக்கு உட்பட்ட ஏ பிரிவு மற்றும் பி பிரிவு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

  இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் கருதி வரும் நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏ பிரிவு வாய்க்கால்கள் மற்றும் பி பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

  தூர் வாரும் பணி என்பது, வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாய்க்கால்கள் அகலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. நன்னிலம் உட்கோட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏ பிரிவு மற்றும் பி பிரிவு வாய்க்கால்களில், 336.30 நீளத்திற்கு, 33 வாய்க்கால்கள் ரூ.279.69 லட்சத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.

  ஏ மற்றும் பி பிரிவுவ டிகால் மற்றும் பாசன வாய்க்கால்களைதூர்வா ரும் நிலையில், விவசா யிகள் தங்களின் மகிழ்ச்சி யை வெளிப்படுத்தி வருகின்றனர். 
  பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாருவதால், மழைக்கால ங்களில் தங்களின் பயிர்கள், மழைநீர் தேங்கி பாதிக்காத வகையில், பாதுகாக்க வாய்ப்பாக அமைந்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

  பொதுப்பணித்துறையினர், தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிலையில், விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து, கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உதவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×