search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
    X
    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

    கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு-கலெக்டர் தகவல்

    கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது எனகலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கான பயிற்சி வகுப்பை கல்வி தொலைக்காட்சி மூலம் கடந்த மார்ச் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம், ரெயில்வே தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு, போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டு வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறுஒளிபரப்பு மாலை7 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. 

    மேலும் இதே நிகழ்ச்சியினை TN Career Services Employment என்ற யூடியூப்பில் காணலாம். பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளி பரப்பப்படும் இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×