search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்ட காட்சி.
    X
    லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்ட காட்சி.

    தச்சநல்லூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்

    தச்சநல்லூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
    நெல்லை:

     நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 2-வது வார்டுக்குட்பட்ட மங்களாகுடியிருப்பு பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். 

    இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

    இது தொடர்பாக 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன் மாநகராட்சியில் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் மண்டல உதவி கமிஷனர் லெனின் உடனடியாக அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க உத்தரவிட்டார். 

    இதையடுத்து மங்களாகுடியிருப்பு பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. 

    தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தடையின்றி வழங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×