என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ்
  X
  நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ்

  ஆன்லைன் மூலம் பதிவுசெய்து வேளாண் எந்திரங்களை வாடகைக்கு பெறலாம்-கலெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவுசெய்து வேளாண் எந்திரங்களை வாடகைக்கு பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
  நாகப்பட்டினம்:

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்களை, வீட்டில் இருந்தபடியே இ-வாடகை ஆன்லைன் செயலியை இதுவரை 204 விவசாயிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தி பயன்பெற்றுள்ளனர்.

  வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்வதற்கான இ-வாடகை செயலியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 8.1.22 அன்று தொடங்கி வைத்தார்.

  விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்லாமல் விவசாயிகள் தங்கள் இல்லத்திலிருந்தே முன்பதிவு செய்ய ஏதுவாக இ-வாடகை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் நேரமும் பணமும் வெகுவாக சேமிக்கப்பட்டு பணிச்சுமையை இலகுவாக்க இயலும்.

  விவசாயிகள் இ-வாடகை செயலியை உழவன் செயலி வழியாக அணுகி வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு பெறுதல், வாடகை நிபந்தனைகள், கட்டண விவரங்கள், வேளாண் செய்திகள், திட்டங்கள், போன்றவற்றை வழங்கப்பட்டுள்ள தெரிவுகளை பயன்படுத்தி அறிய இயலும். இத்திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் எந்திரங்களான 8 டிராக்டர்கள், டிராக்டரால் இயங்கக்கூடிய சுழற்கலப்பை, வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி, இரு சட்டிக்கலப்பை, கொத்துக்கலப்பை, லேசர் மூலம் நிலம் சமன் செய்யும் கருவி, வைக்கோல் கட்டு கட்டும் கருவி, அகழி தோண்டும் கருவி, மரக்கன்று நட குழி தோண்டும் கருவி, தென்னை மட்டை மற்றும் வேளாண் கழிவுகளை தூளாக்கும் கருவி, நீர் இறைக்கும் கருவி போன்றவற்றுடன் ஒரு மணிக்கு ரூ.400 வாடகையிலும்.

  நெல் அறுவடை செய்யத் தேவைப்படும் அறுவடை எந்திரம் டயர் வகைக்கு 1 மணிக்கு ரூ.1010 க்கும், பெல்ட் வகை எந்திரம் மணிக்கு ரூ.1630க்கும் விவசாயிகளுக்கு குறைந்த மானிய வாடகையிலும், மேடு பள்ளமான விவசாய நிலங்களை சமன் செய்வதற்கு தேவைப்படும் மண் தள்ளும் எந்திரம் 1 மணிக்கு ரூ.970 எனும் மான்ய வாடகை அடிப்படையிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  நாகப்பட்டினம் மாவட்ட த்தில் 135 பேர் டிராக்டர், சுழற்கலப்பை, வைக்கோல் ரொட்டடிவட்டர் லேசர் மூலம் 810 மணிநேரமும், 8 பேர் மேடு பள்ளமான விவசாய நிலங்களை சமன்செய்வதற்கு; மண் தள்ளும் எந்திரம் 144 மணிநேரமும், அறுவடை எந்திரம் டயர் 38 பேர் 239 மணிநேரமும், கைத்துளைகருவி எந்திரம் 3 பேரும் என மாவட்டத்தில் இதுவரை 204 பேர் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் எந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலி பயன்படுத்தி பயன்பெற்றுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×