என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பதவியேற்ற புதிய நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
  X
  பதவியேற்ற புதிய நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

  ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
  ஆத்தூர்:

  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்கத்தின் புதிய தலைவராக புதுநகர் செல்வம், செயலாளராக தட்சணாமூர்த்தி, பொருளாளராக விநாயகம், துணைத்தலைவராக லசிங்டன், துணை செயலாளராக வெள்ளச்சாமி, செயற்குழு உறுப்பினர்களாக சிவசுப்ரமணியன், தங்க பெருமாள், முருகானந்தம், சின்னத்துரை, பாலமுருகன், ஆவுடையப்பன், பெருமாள், கொடிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

  புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா  டி.சி.டபுள்யூ. நிறுவனம் மூத்த செயல் உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. விழாவில் ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

  நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார்,  ஆத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் தமிழரசன், அ.தி.மு.க. ஆத்தூர் நகர செயலாளர் சோமசுந்தரம்,  சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×