search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனங்கள் ஏலம் விடப்பட்ட போது எடுத்தபடம்.
    X
    வாகனங்கள் ஏலம் விடப்பட்ட போது எடுத்தபடம்.

    காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

    மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பாவூர்சத்திரத்தில் ஏலம் விடப்பட்டன.
    வீ.கே.புதூர்:

    மதுவிலக்கு  குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவற்றை  அரசுடமையாக்கப்பட்டு வாகனங்களை ஏலம் விடுவது வழக்கம்.

    அதன்படி பாவூர்சத்திரம்  காவல் நிலையம் அருகில் உள்ள வெண்ணிமலை முருகன் கோவில் வளாகத்தில்  அரசுடமையாக்கப்பட்ட 71 இருசக்கர வாகனங்கள், சுமோ, மாருதி கார், ஆம்னி உள்ளிட்ட 3 நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விடும் பணி நேற்று நடைபெற்றது.
     
    இதில் தென்காசி மாவட்ட  காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கலிவரதன் மற்றும் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு ஏலத்தை தொடங்கி வைத்தனர். 

    ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கான ஏலத்தொகை அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை, வரியுடன் சேர்த்து முழு தொகையையும்  செலுத்திய உடன் ஏலதாரர்கள் வசம் ஒப்படைத்தனர். 

    வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு கீழப்பாவூர், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×