search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
    X
    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனையை பார்த்து இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கிறது-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனையை பார்த்து இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது அமைச்சர் அவர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சி நடக்கிறது. இந்தியாவிலுள்ள மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழகத்தை திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரே ஆண்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

    பெண்களுக்கு பஸ்சில் இலவசபயணம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளது. இதனால் தனியார் நிறுவனத்தில் குறைந்த வருமானத்தில் வேலை பார்க்கும் பெண்கள் மிகவும் அதிகமாக பலன் அடைந்து உள்ளனர். 

    மேலும் இத்திட்டம் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துகிறார் முதல்வர். இதை போல எத்தனையோ திட்டங்களை அறிவித்த முதல்வர் அந்த திட்டங்களால் மக்கள் முழு பயன் அடைகிறார்களா? என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

     தினசரி 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக உழைக்கிறார், தமிழக மக்களைப் பற்றி முழுநேரமும் சிந்தித்து செயல்படுகிறார், முதல்வரின் செயல்பாடுகளை பார்த்துதான் மாற்று கட்சியினர் தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். 

    இன்னும் 4 ஆண்டுகளில் தி.மு.க.வை எதிர்க்கும் கட்சிகளே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாகும். முதல்வர் ஸ்டாலின் சாதனையை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார். அப்போது அமைச்சருடன் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
    Next Story
    ×