என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு காட்சி
  X
  கோப்பு காட்சி

  ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை
  நாகர்கோவில், மே. 14-
  நெல்லை முன்னீர்பள்ளம் உச்சிமாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த வர் ரகு. இவரது மகன் சுப்பிரமணி (வயது 19). இவர் ஐ.டி.ஐ. படித்து உள்ளார்.

   தற்போது அங்கு உள்ள மோட்டார் மெக்கானிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக சுப்பிரமணி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

  இதனால் சுப்பிரமணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். நேற்று சுப்பிரமணியம் அவரது தந்தை ரகுவிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

  மனமுடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மேலப்பாளையம் ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார்.

  இதையடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், குமார் ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×