search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.80 ஆக உயர்வு

    கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் பெரும்பாலான காய்கறிகள் விலை 2 மடங்காக விலை அதிகரித்து உள்ளது.
    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 350 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. தக்காளி, பீன்ஸ் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    கோடை மழை மற்றும் ‘அசானி’ புயல் மழையால் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் பெரும்பாலான காய்கறிகள் விலை 2 மடங்காக விலை அதிகரித்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.90க்கும் விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.80 வரையிலும், பீன்ஸ் ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.10க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் 5 மடங்கு விலை அதிகரித்து இன்று ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது.

    இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:

    தக்காளி ரூ.60, நாசிக் வெங்காயம் ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.25, ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.20, கோலார் உருளைக்கிழங்கு ரூ.24, உஜாலா கத்தரிக்காய் ரூ.30, வரி கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.30, அவரைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.50, கோவக்காய் ரூ.12, ஊட்டி கேரட் ரூ.40, ஊட்டி பீட்ரூட் ரூ.30, பீன்ஸ் ரூ.90, ஒயிட் பீன்ஸ் ரூ.50, முள்ளங்கி ரூ.10, நூக்கல் ரூ.10, முட்டை கோஸ் ரூ.10, வெள்ளரிக்காய் ரூ.12, புடலங்காய் ரூ.25, சுரக்காய் ரூ.15, மாங்காய் ரூ.15 சோளம் ரூ.15, இஞ்சி ரூ.27, பச்சை மிளகாய் ரூ25.

    Next Story
    ×