என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  நர்சு வீட்டில் குளியலறையில் கேமரா பொருத்தியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நர்சு வீட்டில் குளியலறையில் கேமரா பொருத்திய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வத்தலக்குண்டு:

  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புதுப்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் விஜயகுமார்(35) கூலித்தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த 30 வயதுடைய நர்சுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் விஜயகுமாரை அந்த பெண் கடுமையாக தாக்கி எச்சரித்துள்ளார்.

  இதனிடையே நர்சின் குளியலறையில் வெப்கேமரா பொருத்தப்பட்டிருந்தது. தனது குளியல் அறைக்கு சென்ற நர்சு இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அந்த கேமராவை அப்புறப்படுத்தினர்.

  விஜயகுமார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றது குறித்தும், அவர்தான் இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்க கூடும் எனவும் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விஜயகுமாரை பிடித்து விசாரித்தனர். தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவர் குளியலறையில் யூடியூப் மூலம் தானியங்கி கேமரா தயாரித்து செல்போன் பவர்பேங்க் மெமரிகார்டு மூலம் காட்சிகள் பதிவாகும்படி வீட்டிற்குள் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  இதனையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்து செய்தனர்.

  Next Story
  ×