என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆளுநர் ஆர்.என்.ரவி
  X
  ஆளுநர் ஆர்.என்.ரவி

  மத்திய அரசு இந்தியை ஒரு போதும் திணிக்கவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுகாதாரம், தொழில், கல்வி உள்பட அனைத்து துறையிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
  கோவை:

  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 

  விழாவில் அவர் பேசியதாவது:

  நமது நாடு புதிய நம்பிக்கையுடன் பயணித்துக்கொண்டு இருக்கிறது. பல்வேறு இனம், மொழி, கலாசாரம் கொண்டதாக இருக்கும் நமது நாடு அனைத்து துறையிலும் வேகமாக முன்னேறி வருகிறது. புதிய யுக்திகளை செயல்படுத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது. 

  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைவரும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக தரமான மருத்துவம் வழங்கப்பட்டு பொதுமக்களின் உடல்நிலையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு டாக்டர்களின் எண்ணிக்கை, ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

  மத்திய அரசு ஒரு மொழியை (இந்தி) திணிக்க முயல்வதாக பேசப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஒருபோதும் இந்தியை திணிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் அந்தந்த மாநிலங்களின் மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில மொழியில்தான் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்புகூட நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். 

  தமிழகம் சுகாதாரம், தொழில், கல்வி உள்பட அனைத்து துறையிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

  தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதும் கூட. 

  பிரதமர் மோடி கூட பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைத்துள்ளார். இதுதவிர ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு வருகிறது.

  ஏன் அதை நமது நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தமிழை பற்றி தெரிந்து கொள்வார்கள். எனவே அதை தமிழக அரசு செய்ய வேண்டும்.

  அதுபோன்று புதிய கல்வி கொள்கையில் பிற மாநிலங்களில் தமிழ்மொழி 3-வது மொழியாக சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

  இவ்வாறு அவர் பேசினார்.

  விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×