search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வந்த காட்சி.
    X
    அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வந்த காட்சி.

    நன்செய்இடையாறு அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில் திருவீதி உலா

    நன்செய்இடையாறு அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு அழகுநாச்சியம்மன் கோயில்  திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அழகுநாச்சியமனுக்கு பொங்கல் மாவிளக்கு படைத்து வழிபட்டனர். 

    திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி வரை தினந்தோரும் அழகுநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்ற்றது.

    10-ம் தேதி அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் 11 மற்றும் 12-ம் தேதி அம்மன் அழைத்தலும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து நன்செய்இடையாறு, குப்பச்சிபாளையம், பொய்யேரி, மரவாபாளையம், ஒழுகூர்பட்டி, ஊஞ்சப்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் கூடுதுறை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மீண்டும் நேற்று நன்செய்இடையாறை திருத்தேர் வந்தடைந்தது. 

     இதில் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் மாவிளக்கு படைத்து அம்மனை வழிபட்டனர். 

    நாளை 14-ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருத்தேர் விழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு அழகு நாச்சியம்மன் கோயில்‌ திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×