என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சிதிலமடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூலூர் அருகே டிரான்ஸ்பார்மரை அகற்ற மக்கள் கோரிக்கை
  நீலாம்பூர்
  கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து 110 கிலோ வாட் மின்சாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  இந்த டிரான்ஸ்பார்மர் மிகவும் சிதிலமடைந்த நிலையில் எப்போது கீழே விழுேமா என்ற நிலையிலேயே காணப்படுகிறது. இந்த பகுதியில் தனியார் பள்ளி, கோவில்கள், உணவகங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறர்கள்.
  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் சிதிலமடைந்து காணப்படுகிறது. இது எப்போது கீழே விழும் என்பது தெரியவில்லை. ஒரு வித பயத்துடனேயே இந்த பகுதியை நாங்கள் கடந்து வருகிறோம். 

  இதுகுறித்து மின்சார வாரியத்திடமும் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள ப்படவில்லை.
  எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் முன்பாக இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×