search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏழ
    X
    திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏழ

    திருவையாறு ஐயாறப்பர் கோவில் தேரோட்டம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவையாறு:

    தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவில் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

    இதனை முன்னிட்டு அறம் வளர்த்த நாயகி அம்மன், ஐயாறப்பர்  தனித்தனி பெரிய தேர்களிலும், பின்னால் விநாயகர், முருகன், ஆட்கொண்டார், சண்டிகேஸ்வரர், அகப்பை சித்தர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளினர்.

    மொத்தம் 2 பெரிய தேர்கள், 5 சிறிய தேர்கள் என 7 தேர்கள் அடுத்தடுத்து வலம் வந்தன.

    தேரை கல்யாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.  

    நான்கு ராஜவீதிகளிலும் 7 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆடி அசைந்து வலம் வந்தது. இன்று மாலையில் தேர்கள் அனைத்தும் கீழவீதி நிலையை அடைகிறது. அப்போது சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. 

    தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வருகிற 16-ந் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெற உள்ளது. 

    Next Story
    ×