என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முகாமில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன் பேசிய காட்சி.
  X
  முகாமில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன் பேசிய காட்சி.

  ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண்மை சிறப்பு முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண்மை சிறப்பு முகாம் நடைபெற்றது.
  தென்திருப்பேரை:

  ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 2021-22-ம் ஆண்டின் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளமடம், கச்சனாவிளை, ஸ்ரீவெங்கடேசபுரம், கருங்கடல் கிராமங்களில் வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இதன் ஒரு பகுதியாக வேளாண் துறை மற்றும் அனைத்து துறைகள் பங்குபெறும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளில் தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

  சிறப்பு முகாமில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேளாண் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விவசாயிகளிடமிருந்து விவசாய கடன் அட்டை தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பயனாளி–களுக்கு கைத்தெளிப்–பான் மானிய விலையில் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அல்லிராணி, வேளாண்மை அலுவலர் திருசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் திட்டங்களை எடுத்துரைத்தனர்.

  மேலும் இதர துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் செய்து இருந்தனர்.  துணை வேளாண்மை அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.
  Next Story
  ×