என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முட்டல் மலை கிராம மக்களிடம் கலெக்டர் கார்மேகம் குறைகள் கேட்ட காட்சி.
  X
  முட்டல் மலை கிராம மக்களிடம் கலெக்டர் கார்மேகம் குறைகள் கேட்ட காட்சி.

  மணிவிழுந்தான் பகுதியில் மலை கிராம மக்களுடன் கலெக்டர் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது.
  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் தலைவாசல்  அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராம் பகுதிகளில்  மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட  கலெக்டர் கார்மேகம் கிராம மக்களிடம்  நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

  முட்டல் மலை கிராமத்தில் கலெக்டர் கள ஆய்வு மேற்கொண்ட போது மலை கிராம மக்கள் சாலை வசதி, பேருந்து வசதி, விளையாட்டு அரங்கு வசதிகளை ஏற்படுத்திதர கோரிக்கைள் வைத்தனர். தொடர்ந்து  முட்டல் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஆய்வு செய்த அவர் மருந்து இருப்பு, நோயளிகளுக்கு அளிப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

  பின்பு முட்டல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிவறை, குடிநீர் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

  அதனை தொடர்ந்து பூமரத்துபட்டி மலை கிராம மக்களின் கோரிக்கைகளான சாலை வசதி, சமூதாய கூடம் மற்றும் காய்கறி தளம் போன்ற கோரிக்கைகளை கலெக்டர்  கேட்டறிந்தார். 

  ராமானுஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது, சாத்திய கூறுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்கள். முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 195 பயனாளிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பிளான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

   நிகழ்ச்சியில் ஆத்தூர்  ஆர்.டி.ஓ. சரண்யா, மாவட்ட வன அலுவலர் (ஆத்தூர் வன கோட்டம்)  சுதாகர், வேளாண்மை துறை இணை இயக்குநர்  கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்  ரவிக்குமார், மணிவிழுந்தான் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி உள்பட பலர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×