என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
  X
  ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

  திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  கரூர் :

  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது, திருநங்கைகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குடியிருப்பதற்கு வீடு, கல்வி தகுதிகேற்ப தனியார் வேலை வாய்ப்பு, தனியாகவோ அல்லது குழுவாகவோ, சுயதொழில் தொடங்குவதற்கு பயிற்சியுடன் கூடிய வங்கி கடனுதவி, 

  மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உருவாக்கி உங்களின் வாழ்வை மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் வாழ மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்திட தயாராக உள்ளது என்றார்.

  முன்னதாக, திருநங்கைகளின் குறைகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

  Next Story
  ×