என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேம்பார்பட்டியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
  X
  வேம்பார்பட்டியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

  திண்டுக்கல் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் பகுதியில் தேங்காய் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அஞ்சுகுழிபட்டி, கோணப்பட்டி, செங்குறிச்சி, நத்தம், பரளி, லிங்கவாடி, மணக்காட்டூர், சிறுகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் தேங்காய் விவசாயம் செய்யப்படுகிறது.

  இந்தப் பகுதியிலிருந்து தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வேம்பார்பட்டி குடோனில் தேக்கி வைக்கப்படுகிறது.இங்கிருந்து மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

  தற்சமயம் வடமாநிலங்களில் வெயில் கடுமையாக உள்ளதாலும், சுப முகூர்த்த நாட்கள் இல்லாததாலும் தேங்காய் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் ஏற்றுமதி தடைபட்டு தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.
  இதன் காரணமாக காங்கேயம், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் கொப்பரைக்கு தேங்காய் அனுப்பப்படுகிறது.ஆனால் கொப்பரைத் தேங்காய்க்கும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

  இதுகுறித்து வேம்பார்பட்டியைச் சேர்ந்த விவசாயி அபுதாகிர் கூறும்போது, வட மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி இல்லாததால் கொப்பரைக்கு தேங்காய் அனுப்பி வைக்கிறோம். ஆனால் அங்கும் ஒரு கிலோ ரூ22 க்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். ஒரு தேங்காய் விலையும் ரூ 6 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தேங்காய் பறிப்பதற்கு குறைந்தது கூலி் உட்பட ரூ.4 செலவாகும்.

  தற்சமயம் எலுமிச்சம் பழம் ரூ 10 க்கு விற்கப்படும் சூழ்நிலையில் தேங்காய் ரூ.6 க்கு விற்பனை செய்யப்படுவது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. எனவே தமிழக அரசு கொப்பரை கொள்முதல் நிலையம் அமைத்து தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்து தென்னை விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  Next Story
  ×