search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

    திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி திண்டுக்கல் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவ்வப்போது சாரல், மிதமான, பலத்த மழை பெய்து வருகிறது.
    திருப்பூர்:

    நத்தக்காடையூர் கடைவீதியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற வாரச்சந்தையில் தக்காளி கிடுகிடுவென விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விறபனை செய்யப்பட்டது.

    இதுபற்றி சந்தையில் தக்காளி விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி திண்டுக்கல் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அவ்வப்போது சாரல், மிதமான, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி உற்பத்தியில் விவசாயிகளின் வயல்களில் தக்காளி செடிகள் மற்றும் தக்காளி காய்கறி, பழங்கள் மழை நீரில் நனைந்து அழுகி வீணாகி வருகிறது.

    மேலும் மழைக்கு தப்பிய தக்காளி மற்றும் அழுகல் தக்காளி பழங்கள் தவிர மற்ற தக்காளி பழங்கள் உடனடியாக அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக பெட்டிகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. 

    இதனால் கடந்த ஒரு 3 வாரமாக வார சந்தைகள், தினசரி விற்பனை காய்கறி கடைகள், மொத்த காய்கறி விற்பனை மண்டி–கள், அங்காடிகள், கடைகள் ஆகியவைகளுக்கு தக்காளி வரத்து மிகவும் குறைந்து உள்ளது. இதனால் தக்காளி விலை ரூ.60 வரை உயர்த்தி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் வைகாசி மாதம் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளதால் அப்போது பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது தேவை அதிகரித்து வரத்து குறைந்தால் தக்காளி விலை மேலும் உயர்த்தி விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×