என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜி.கே.வாசன்
  X
  ஜி.கே.வாசன்

  லஞ்சம் கொடுத்து உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
  சென்னை:

  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  மக்கள் நலன் காக்கும் திட்டமான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமானது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் அதிகாரிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் நிதி வழங்க தமிழக அரசின் அதிகாரி கேட்டு வாங்கிய லஞ்சத்தால் ஓர் உயிர் பலியாகியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

  உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டமோ, மாநில அரசு திட்டமோ – மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தும் போது நேர்மையை கடைப்பிடிப்பதோடு, காலதாமதமின்றி அத்திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அரசின் கடமை.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×