search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    தென்காசி மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

    2 நாட்களாக மலைப்பகுதிகள் மட்டுமின்றி ஊர்ப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை காரணமாக பிரசித்தி பெற்ற குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். வழக்கமாக மே மாதம் இறுதியில் பருவக்காற்று வீசத்தொடங்கும்.

    ஆனால் இந்தாண்டு முன்னதாக தென்காசி மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இந்நிலையில் 2 நாட்களாக மலைப்பகுதிகள் மட்டுமின்றி ஊர்ப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக தென்காசியில் 4.40 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணைப்பகுதியில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் மெயினருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தணணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

    தற்போது பல மாவட்டங்களில் கத்திரி வெயில் வாட்டி வருகிறது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் அதற்கு மாறாக குளுகுளு சீதோஷனநிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக இதே நிலை காணப்படுகிறது. எனவே இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுகிறது.

    Next Story
    ×